
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் மூன்று நாள் மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சுயதொழில் ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.