
அமெரிக்காவில் 9/11 பயங்கரவாத தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா இப்போராட்டத்தில் முன்னணியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான உறுதியும் எதிர்ப்பும் மாறாமல் இருப்பதாகவும், அதை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.