
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.