
தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தால் ஏற்பட்ட விமர்சனங்களை அடுத்து, சிறைத்துறை இயக்குநர் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு சென்னை மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றிய கே.சங்கர், புதிய சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் கார்த்திக் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் காத்திருப்புப் பிரிவிலிருந்த சஞ்சய் மாத்தூர் மாநில குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாகவும், பி.ரகுபதி கரூர் மாவட்ட எஸ்.பி-யாகவும் புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.