
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்றும், வீராங்கனைகளை தக்கவைத்து கொள்வதற்கான இறுதிநாள் செப்.28 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.