
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பாமக எம்எல்ஏ சவுமியா சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறப்போவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாமக மகளிர் மாநாட்டில் கலந்துகொண்ட போது தரிசனம் செய்த நிலையில், தற்போது எம்எல்ஏ ஆன பிறகு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் வழிபட்டதாக அவர் கூறினார்.