
ரஞ்சி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடிய 21 வயது பிரியான்ஷு மொலியா, ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் 321 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
36 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் இந்த சாதனையைப் படைத்துள்ள அவர், ரஞ்சி கோப்பை வரலாற்றில் பரோடா அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ராஜ்கோட்டிலிருந்து வதோதராவுக்குக் குடிபெயர்ந்து மொஹிந்தர் லாலா அமர்நாத் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மேம்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.