
பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
முந்தைய சார்பதிவாளர் நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது என மினிட் புத்தகத்தில் குறிப்பு எழுதியிருந்தும், அதை மீறி பொறுப்பு சார்பதிவாளர் நிலத்தைப் பதிவு செய்ததாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், மோசடியின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி ராஜசேகர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.