
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை நடைபெறும் இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஜிம்பாப்வே பங்கேற்கிறது.
காயத்திலிருந்து இன்னும் மீளாத வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நிகரவா விலகியுள்ள நிலையில், புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.