
மெட்டா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா மற்றும் மைக்ரோஃபோன் வசதிகளுடன் நிகழ்நேர மொழிபெயர்ப்பு உள்ளிட்ட நவீன அம்சங்களை வழங்குகின்றன.
அமெரிக்காவின் ACLU மற்றும் EPIC உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட சிவில் உரிமை அமைப்புகள், முகஅடையாளத் தொழில்நுட்பத்தை இந்தக் கண்ணாடிகளில் இணைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியுரிமை அச்சம் காரணமாக இங்கிலாந்து மற்றும் நியூயார்க் நீதிமன்றங்கள், நீதிமன்ற வளாகங்களுக்குள் இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.