
யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து இரு நாடுகளுக்கும் இடையேயான பண்டைய நாகரிகங்களின் பிணைப்பை மாபெரும் கூட்டாண்மையாக மாற்றி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் தனது மனைவியும் பிரதமர் மோடியை விரைவில் மீண்டும் சந்திக்க ஆர்வமாக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.