
குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும் குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மட்டும் அடங்கிய திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் அல்லாத சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டேட்டா வசதி நீக்கப்படுவதால் இந்த புதிய திட்டம் வழக்கமான திட்டங்களை விடக் குறைவாகவும் மலிவாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.