
பழங்கரை அணைப்புதூரில் உள்ள ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் செயற்கை இழை மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தையல் இயந்திரத்தின் வேகம் மற்றும் தொழிலாளர்களின் பணிபுரியும் நேரத்தை துல்லியமாக பதிவு செய்து உழைப்புத் திறனை 85 சதவீதம் வரை உயர்த்த முடியும்.
ஐரோப்பிய நாடுகளுடன் எதிர்பார்க்கப்படும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனாவுக்கு சவால் விடும் விலை போட்டித்திறன் மூலம் திருப்பூர் ஏற்றுமதி புதிய பாதையை உருவாக்குகிறது.