
இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய பிரபல கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம் (79), உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 29 அன்று காலமானார்.
1966-ல் 'யாருக்காக அழுதான்' படம் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், 'அன்னக்கிளி' தொடங்கி 45 வருடங்களுக்கும் மேலாக இளையராஜாவின் இசைக்குழுவில் முன்னணி கிதார் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகி சுஜாதா மோகன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.