
வாட்ஸ்அப் சேனல்களில் பகிரப்படும் புகைப்படம் அல்லது வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ள புதிய வசதி அறிமுகமாகிறது.
ஏ.ஐ. கன்டென்ட் லேபிள் என்ற இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சோதனைப் பதிப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.
சேனல் நிர்வாகிகள் லேபிளை உறுதி செய்து சேர்த்துவிட்டால் பின்னர் அதை நீக்க முடியாது என்று கூறப்படுகிறது.