
இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், தான் அடித்த ஐந்து சிக்சர்களுக்காக அல்லாமல், இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் என அறியப்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்த உலக கோப்பையில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த தேசமும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா கடைசியாக 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது, எனவே இந்த முறை கோப்பையை வெல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று ரிங்கு சிங் நம்பிக்கை தெரிவித்தார்.