
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ் கோல் அடித்த நிலையில், இரண்டாவது பாதியில் பெரோவிச் மற்றொரு கோல் அடித்தார்.
முடிவில் சென்னை அணி 0–2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.