
பியூ ஆய்வு மையம் 36 நாடுகளில் நடத்திய ஆய்வில், இலங்கையில் 79 சதவீதம் பேர் இந்தியா மீது நேர்மறையான எண்ணங்களைக் கொண்டுள்ளனர்.
ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு அதிகமாக உள்ள நிலையில், பாகிஸ்தானில் 91 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிராக உள்ளனர்.
இந்த ஆய்வில் பிரிட்டன் மற்றும் கென்யாவில் தலா 71 சதவீதம் பேரும், அமெரிக்காவில் 45 சதவீதம் பேரும் இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.