
கோயம்புத்தூரைச் சேர்ந்த சுஷ்மிதா கிருஷ்ணன், ஆகாயத் தாமரையிலிருந்து இரசாயனம் அற்ற உயர்தர காகிதத்தை தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்தத் தாள் தயாரிப்புக்கு சாதாரண காகிதங்களை விட 75% குறைவான தண்ணீரே தேவைப்படுவதால், இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த சுஷ்மிதா, 2024-ல் உலக நிலைத்தன்மைக் கழகத்தின் ஊக்கத்தொகையைப் பெற்ற ஒரே இந்தியர் ஆவார்.