
இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 'நாகரிக உரையாடல் மன்றம்' கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் மூத்த அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.