
அமெரிக்காவின் சாண்டா கிளாரிடா பள்ளத்தாக்கில் உள்ள கிப்பன் பாதுகாப்பு மையத்தில், ஐந்து இனங்களைச் சேர்ந்த சுமார் 40 கிப்பன் குரங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மட்டுமே காணப்படும் அழிந்து வரும் ஜாவா கிப்பன் இனத்தை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த முதல் மையம் இதுவாகும்.
இயற்கை வாழ்விடங்கள் அழிப்பு மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கிப்பன்களைப் பாதுகாக்க, பார்வையாளர்களுக்கான கல்வி மையத்தை அமைக்க நிதி திரட்டப்பட்டு வருகிறது.