
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உணவுத் தேவை அல்லது தற்காப்புக்காக ஒரு விலங்கைக் கொல்வது வேட்டை என்றும், அதிகாரம் அல்லது பலத்தை நிரூபிக்க நடக்கும் சண்டையே ‘வேட்டுவம்’ என்றும் படத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நீலம் பரொடக்ஷன் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா, வி.ஆர்.தினேஷ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.