
அக்டோபர் 6-ம் தேதி தொடங்கும் 31-வது புசான் சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ்ப் படமான 'செல்வி' மற்றும் 'பேர்ட்ஸ் இன் தி டார்க்' ஆகிய படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.
சைலேஷ் ரத்னகுமார் இயக்கிய 'செல்வி' படம், ஒரு பெண்ணின் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கதையம்சம் கொண்டது.
பஞ்சாப் விவசாய போராட்டப் பின்னணியில் உருவாகியுள்ள 'பேர்ட்ஸ் இன் தி டார்க்' படத்தை ஹன்சல் மேத்தா மற்றும் ஷாகில் சைகல் தயாரித்துள்ளனர்.