
தென் கொரியாவின் ஆசான் நகரில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி சர்மா, அன்மோல் கர்ப் உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தன்வி சர்மா 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சீனாவின் யுவான் ஆன் கியை வீழ்த்திய நிலையில், அன்மோல் கர்ப் 16-21, 21-17, 21-12 என்ற கணக்கில் ஹாங்காங்கின் லோ சின் யானை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 20-22, 21-14, 12-21 என்ற செட்களில் இஸ்ரேலின் டேனியல் துபோவென்கோவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.