
ஐக்கிய அரபு அமரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
கடந்த 28-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டம் புள்ளிப் பட்டியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.