
மாஸ்கோ அருகே உள்ள வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 சரக்கு குடோன்கள் மீது உக்ரைன் ராணுவம் நூற்றுக்கணக்கான ட்ரோன்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில் தீக்கிரையாகின.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ மாகாண ஆளுநர் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
பதிலடியாக கடந்த ஒரு வாரத்தில் உக்ரைனின் ராணுவத் தளங்கள் மீது 1,550 ட்ரோன்கள் மற்றும் 62 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.