
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளும் இதில் அடங்கும் என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.