
புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் பாரம்பரிய பயிர் வகைகளையும் பார்வையிட்டார்.
மேலும், மாவட்டத்தில் ரூ.11.72 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.