
கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 65 கிலோ எடை பிரிவில் மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி ராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா, 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே தனது அடுத்த இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசு விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.