
செப்டம்பர் மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தின் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதால் மின் வாரியத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பரில் மின் தேவை குறைய வேண்டும் என்ற நிலையில், கடுமையான வெயில் காரணமாக மின் தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது.
மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது தவிர்க்கப்பட்டு, சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினமும் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் மின் தடை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.