
சூடானின் மேற்கு கார்டோபான் மாகாணம் எல் நஹொட் நகரில் உள்ள அல் சாரா என்ற தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்தபோது அங்கு 62 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்கூரை இடிந்து விழுந்த இந்த விபத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் உயிர் பிழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதோடு, சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.