
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'சர்தார் 2' படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்த ஸ்பை த்ரில்லர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டியுள்ள நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.