
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பினரும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குளிர்காலம் தொடங்கும் முன்பே மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கு அதிபர் டிரம்ப் உதவுவார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு உக்ரைன் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்.