
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் படகுப் போட்டியில் இந்தியாவின் சத்னம் சிங் மற்றும் சல்மான் கான் ஜோடி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய ஜோடி பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 13.25 விநாடிகளில் கடந்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.