
டிஎன்பிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் முதல்கட்டப் போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.