
கடந்த வர்த்தக தினத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 153 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில், அது 24,325 புள்ளிகளைக் கடந்தால் 24,450 வரை செல்லக்கூடும்.
என்.எஸ்.இ-யில் வர்த்தகமான 3,632 நிறுவனப் பங்குகளில் 2,106 பங்குகள் உயர்வைச் சந்தித்தன, 1,402 பங்குகள் சரிந்தன மற்றும் 124 பங்குகள் மாற்றமின்றி முடிந்தன.
துறை சார்ந்த குறியீடுகளில் 'நிஃப்டி மீடியா' அதிகபட்சமாக 2.13% ஏற்றத்தையும், 'நிஃப்டி கெமிக்கல்ஸ்' அதிகபட்சமாக 0.50% சரிவையும் பதிவு செய்துள்ளன.