
சண்டிகரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த தமிழக அணி, சண்டிகர் அணியை ஃபாலோ-ஆன் செய்ய வைத்தது.
ஃபாலோ-ஆன் பெற்ற சண்டிகர் அணி, 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 288 ரன்கள் பின்தங்கியுள்ளதால், தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.