
தமிழகத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
மதுராந்தகத்தில் அதிமுக, தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 48 பேரும், தாராபுரத்தில் 51 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் 19 வரை மனுக்களை திரும்பப் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.