ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், ஏடிஎம், இணைய வங்கி சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.
வாடிக்கையாளர்கள் ரொக்கப் பரிவர்த்தனை மற்றும் காசோலை தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.