துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில் நார்த் ஜோன் அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், வெஸ்ட் ஜோன் அணி 187 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
வெஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாம்ஸ் முலானி அதிகபட்சமாக 52 ரன்களைக் குவித்தார்.
நார்த் ஜோன் பந்துவீச்சாளர் அபித் முஷ்டாக் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் ஜோன் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.