
இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான 'சிக்மா' அக்டோபர் 2-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தனது ஆபத்தான பயண அனுபவங்களை ஊடக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
கேரளா எல்லையில் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு அருகில் தங்கியிருந்தபோது சிறுத்தையை நேரில் பார்த்ததாகவும், இதனால் தனது பெற்றோர் மிகுந்த கவலை அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற தியேட்டரில் கேசியராக பணியாற்றிய அனுபவம் தனக்கு மிகச்சிறந்ததாக இருந்தது என்று சஞ்சய் கூறியுள்ளார்.