
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ‘ஏ’ அணி முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 113 ரன்களுக்கு சுருண்டது.
நியூசிலாந்து தரப்பில் சைமன் கீன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்; இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 32 ரன்களும், யாஷ் ரத்தோட் 44 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து, 22 ரன்கள் முன்னிலையில் உள்ளது.