தன்னை சகோதரி ராதா ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகக் கூறிய புகார் குறித்து நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
ஏஆர்எஸ் கார்டன் பங்குகள் தொடர்பான நிதி விவகாரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராதா மீது சட்டபூர்வமாய்க் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்கவே ராதா தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் அம்பிகா குற்றம் சாட்டியுள்ளார்.