
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி, ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் மாணவர்கள் 16 நாட்களாகப் போராடி வருகின்றனர்.
சிஐடி விசாரணையில் 150 கேள்விகளில் 120 கேள்விகள் தேர்வுக்கு முன்பே கசிந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு நடைபெற்ற செப்டம்பர் 21 மற்றும் 22, 2024 தேதிகளில் இணைய சேவை முடக்கப்பட்ட நிலையிலும் முறைகேடு நடந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.