
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இந்திய அணியும், முதல் வெற்றியைப் பதிவு செய்ய ஆப்கானிஸ்தான் அணியும் போராடும்.