சாலை விபத்துகளைக் குறைக்க, வாகனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு அமைப்பான V2V தொழில்நுட்பத்தை மத்திய அரசு கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது.
அக்டோபர் 1, 2028 முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய வாகனங்களிலும் AIS-230 தரத்திலான V2V தொடர்பு சாதனம் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.
இந்தச் சாதனம் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள பிற வாகனங்களுடன் வயர்லெஸ் முறையில் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு, விபத்து ஆபத்துகளை ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.