
இந்தியா மற்றும் பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி, அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின் மூலம் இந்திய அணி வீரர்கள் அதிக அனுபவத்தைப் பெறுவார்கள் என்று பிரேசில் அணியின் முன்னாள் கேப்டன் கஃபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கஃபு, பிரேசில் அணியுடன் மோதுவது இந்திய அணிக்கு நல்ல பலன் தரும் என்றார்.