
டிஎன்பிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து 192 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
திருச்சி அணியின் சஞ்சய் யாதவ் 54 ரன்களும், எஸ். ஷியாம் சுந்தர் 52 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 192 ரன்கள் எடுக்க வேண்டும்.