
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படங்களை முடித்த பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தின் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.