
அமெரிக்க அதிபர் டிரம்ப், கூகுள் மேப்ஸில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை 'டிரம்ப் பெருங்கடல்' என மாற்ற யோசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தெற்கு கரோலினாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் இது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார்.
பெருங்கடல்கள் பல நாடுகளை இணைப்பதால் அதன் பெயரை மாற்றுவது சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தும் என சுந்தர் பிச்சை எச்சரித்ததை அடுத்து அத்திட்டத்தைக் கைவிட்டதாக டிரம்ப் கூறினார்.